Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியா நெருக்கடி: பேரழிவு நிலையில் மனிதாபிமானம் என்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்

In உலகம்
Published: 04:19 GMT, Sep 14, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Elakkiya

மியன்மாரிலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மனிதாபிமான பேரழிவு நிலைமையை எதிர்கொள்வதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். மேலும் ரோஹிங்கியா கிராமத்தவர்கள் மீதான படையினரின் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மியன்மாரில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வன்முறைகளுக்கு முடிவுகட்டவேண்டும். அதுமட்டுமல்ல சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி நாட்டை விட்டு வெளியேறும் அனைவரும் மீண்டும் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மியன்மார் அரசை கேட்டுக் கொள்கின்றேன்.

ராக்கின் மாநில முஸ்லிம்களுக்கு நிரந்தர அல்லது தற்காலிக குடியுரிமை வழங்கி அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் உரிமைகளை கொடுத்து ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ வழிவகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் முதல் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் சுமார் 3 லட்சத்து 79 ஆயிரம் ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அந்நாட்டு அரசாங்க ஆலோசகர் ஆங் சாங் சூகி தவறிவிட்டதாக சர்வதேச நாடுகள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளன. அதுமட்டுமின்றி அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றது.

இவ்வாறான அழுத்தங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் எதிர்வரும் 19 ஆம் திகதி நியூயோர்கில் ஆரம்பமாகவுள்ள ஐநா. பொதுச் சபைக் கூட்டத்தை  ஆங் சாங் சூகி தவிர்ப்பதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் பொதுச் சபை கூட்டம் இடம்பெறும் அதேநாளில் தேசிய நல்லிணக்கத்திற்காகவும்  அமைதிக்காகவும் ஆங் சாங் சூகி தொலைக்காட்சியில் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg