Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மே.தீவுகளின் உலக்கிண்ண கனவை கலைத்த மழை: இலங்கைக்கு அடித்த அதிஷ்டம்

In கிாிக்கட்
Updated: 05:40 GMT, Sep 14, 2017 | Published: 04:35 GMT, Sep 14, 2017 |
0 Comments
6019
icon_com
This post was written by : Anojkiyan
Lahiru Thirimanne

அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருந்த ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மழைக்குறுக்கிட்டதன் காரணமாக, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு குறைந்துள்ளது.

எனினும், எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றால் மட்டுமே உலகக்கிண்ண தொடருக்கான நேரடி தகுதியை பெறமுடியும் என்ற இக்கட்டான நிலைக்கு மேற்கிந்திய தீவுகள் அணி தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடரில் நேரடியாக பங்கேற்கும் 8 அணிகளில் இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய 7 அணிகள் தகுதிபெற்று விட்டன.

ஆனால் தற்போது 8வது அணியாக தகுதிபெறும் அணிகளில் இலங்கை அணி 86 புள்ளிகளுடனும், மேற்கிந்திய தீவுகள் அணி 78 புள்ளிகளுடனும் முறையே 8வது, 9வது இடத்தில் உள்ளன.

எனவே இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஒரு போட்டியிலாவது மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்தால் இலங்கை அணிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பு கிட்டும்.

ஆனால் பலம்பொருந்திய அணியாக வலம்வரும் இங்கிலாந்து அணியை சமீபகாலமாக கடும் பின்னடைவை சந்தித்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணியால் அடிபணிய வைப்பது கடினமான செயல் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg