Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கதலோனியாவின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு: அதிகாரிகளுக்கு அழைப்பாணை

In ஐரோப்பா
Published: 04:54 GMT, Sep 14, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Elakkiya

ஸ்பெய்ன் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்ட சுதந்திரத்திற்கான வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்கும் 700க்கும் மேற்பட்ட கத்தலோனிய மேயர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெய்ன் பொது வழக்கறிஞர் ஜோஸ் மனுவல் மாஸா  இந்த அழைப்பாணையை அனுப்பியுள்ளார்.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரும் கதலோனியாவின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடத்துவதற்கு மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கான சட்டமூலமும் கதலோனிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மேற்படி சட்டமூலம் ஸ்பெய்ன் அரசியலமைப்புக்கு முரணானது என கருதும் ஸ்பெய்ன் அரசியலமைப்பு நீதிமன்றம் சட்டமூலத்தை இடைநீக்கம் செய்துள்ளது. எனினும் திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடத்தப்படும் என கதலோனிய அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

ஸ்பெய்ன் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இத்தகையை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வாக்குப்பதிவு செய்வதற்கு உதவி புரிவதில் தவறில்லை என கதலோனிய அதிகாரிகளுக்கு சுதந்திரத்திற்கான மாநகர சபை உத்தரவாதம் அளித்துள்ளது.

இவ்வாறிருக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பொதுமக்களின் நிதிகளை நகரசபைத் தலைவர்கள் தவறாக பயன்படுத்துவர் என ஸ்பெய்ன் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் வாக்களிப்புக்கு ஆதரவளிக்கும் நகரசபைத் தலைவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்பெய்ன் பொது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அழைப்பாணைக்கு பதிலளிக்காத பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல வாக்குச் சீட்டுக்கள் மற்றும் வாக்களிப்பு கருவிகளை கைப்பற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)