Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெப்சி வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது: காலா படப்பிடிப்புக்கள் ஆரம்பம்!

In சினிமா
Published: 04:31 GMT, Sep 14, 2017 |
0 Comments
1219
This post was written by : Ravivarman
1501785020d

திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நிலவி வந்த மோதலால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பெப்சி தொழிலாளர்கள் நேற்று (புதன்கிழமை) முதல் பணிக்கு திரும்பி உள்ளனர்.

வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்த நிலையில் பெப்சி தொழிலாளர்கள் இன்றுமுதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால் ரஜினியின் ‘காலா’ உட்பட அனைத்துப் படப்பிடிப்புகளும் மீண்டும் தொடங்கி உள்ளன.

கடந்த 12 நாட்களாக நடந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் திரைப்பட துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுப்பர் ஸ்ரார் ரஜினி காந்த் நடிக்கும் ‘காலா’ உட்பட 30-க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் 12 நாட்களாக நடைபெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg