Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சங்கர் இயக்கத்தில் அஜித்?

In சினிமா
Published: 04:56 GMT, Sep 14, 2017 |
0 Comments
1884
This post was written by : Ravivarman
201709131758404909_1_shankarAjith1._L_styvpf

‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து சங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதுடன், அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’. ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து விவேகம் படத்தை சிவா இயக்கி இருந்தார்.

‘விவேகம்’ திரைப்படம் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, அஜித்துக்கு கையில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஒய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையிலேயே அஜித்தின் அடுத்த படம் குறித்து, தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg