Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

குடியேற்ற சட்டமூலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு ட்ரம்ப் இணக்கம்

In
Published: 05:49 GMT, Sep 14, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Elakkiya

அமெரிக்காவில் ஆவணங்களற்ற ஆயிரக்கணக்கான இளம் குடியேற்றவாசிகள் நாடுகடத்தப்படுதலில் இருந்து காப்பாற்றுவதற்கான ஒரு உடன்பாட்டை அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் காங்கிரஸிலுள்ள ஜனநாயக கட்சித் தலைவர்களுக்கு இடையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் மேற்படி இணக்கம் காணப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ட்ரம்பினால் முன்மொழியப்பட்ட மெக்சிகோ எல்லைச்சுவர் தவிர்ந்த எல்லைப் பாதுகாப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் முன்மொழிவுகளிலிருந்து மெக்சிகோ எல்லைச் சுவர் தவிர்க்கப்படும் என்பதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், ‘டாகா மற்றும் எல்லைப்பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விவாதிக்கப்பட்டது. எனினும் மெக்சிகோ எல்லைச் சுவரை பின்தள்ளுவதற்கு உடன்பாடு எட்டப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படும் சிறுவர்கள் நாடுகடத்தப்படுதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் DACA (Deferred Action for Childhood Arrivals)திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் சுமார் 8 லட்சம் பேரை பாதுகாப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களை பாதுகாக்கும் வகையில் தொழில் அல்லது கல்விக்கான தற்காலிக அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 8 ஆம் திகதி இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டிருந்த ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றிடாக எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் புதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)