Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு செய்ததை போல் அவுஸ்ரேலியாவுக்கு செய்ய முடியாது: கங்குலி கருத்து

In கிாிக்கட்
Published: 05:34 GMT, Sep 14, 2017 |
0 Comments
2113
This post was written by : Anojkiyan
sourav-ganguly-virat-kohli-afp_806x605_81481719920

இலங்கைக்கு எதிராக 5-0 என தொடரை வென்றது போல் அவுஸ்ரேலியாவை இந்தியாவால் வெற்றிகொள்ள முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஒருநாள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் இலங்கைக்கு எதிராக செய்தது போன்று 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்வதற்குரிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் அவுஸ்ரேலியா வலுவான அணி. நமது தேர்வாளர்கள் இளம் வீரர்களின் திறமையை பரிசோதிக்க விரும்புகிறார்கள்.

2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரை கருத்தில் கொண்டு தேர்வாளர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. உலக உலகக்கிண்ணத்துக்கு தயாராவதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. அணியை வலுப்படுத்த ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுப்பது அவசியமாகும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg