Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

In இந்தியா
Published: 05:45 GMT, Sep 14, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Ravivarman
25-1432527489-stalin6-600

தமிழகத்தில் இப்போது பாரதிய ஜனதா ஆட்சி தான் நடைபெறுகிறது என மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தாம்பரத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”தமிழகத்தில் இப்போது பா.ஜனதா ஆட்சி தான் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஆட்சியை அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள். மக்களின் பிரச்சனையை அவர்கள் தீர்க்கவில்லை.

இதனால் மக்கள் கொதித்துள்ளனர். ஒன்றுதிரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிறார்கள். அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்.

நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத மாணவி மரணம் தற்கொலையாக இருந்தாலும் அதை கொலையாகத்தான் கருதவேண்டும். அனிதா மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg