Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது பேச்சை சசிகலா கேட்டிருந்தால் சிறைத்தண்டனை கிடைத்திருக்காது: ராஜேந்தர்

In இந்தியா
Published: 05:49 GMT, Sep 14, 2017 |
0 Comments
2544
icon_com
This post was written by : Ravivarman

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனபோது அவரை முதலமைச்சராக வருவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என நான் எச்சரித்திருந்ததை ஏற்றிருந்தால் இன்று அவர் சிறைக்குச் செல்லவேண்டியிருந்திருக்காது’ என திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜெயலலிதாவுடனும், சசிகலாவுடனும் பல காலகட்டத்தில் நட்போடு, பல விஷயத்தில் உறுதுணையாக, பக்கபலமாக, கலந்தாலோசனை செய்யும் இடத்தில் நான் இருந்தேன்.

நீங்கள் கட்சியின் பொதுச்செயலாளரானதோடு இருந்து விடுங்கள். அதற்குமேல் நீங்கள் முதலமைச்சர் ஆகாதீர்கள் என நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்காது.

இது அவருக்கு எதிரான சூழ்ச்சி என்று நான் அவரிடம் பலமுறை தெரிவித்திருந்தும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.  அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனபோது அதை நான் எதிர்க்கவில்லை.

அது அவர்கள் கட்சி பிரச்சனை. ஆனால், அவர் முதலமைச்சராக முயற்சி செய்தபோது நான் தடுத்திருந்தேன்” என இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg