Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர் வீட்டில் பட்டப்பகலில் கைவரிசையை காட்டிய திருடர்கள்!

In இலங்கை
Updated: 06:10 GMT, Sep 14, 2017 | Published: 06:10 GMT, Sep 14, 2017 |
0 Comments
1347
This post was written by : Varshini

யாழில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள், 40 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் வசிக்கும் குறித்த ஊடகவியலாளர் வீட்டில், நேற்று (புதன்கிழமை) இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக உட்சென்று நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

jaffna jewellery

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg