Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவில் வெடிகுண்டு அச்சுறுத்தல்- மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

In ஐரோப்பா
Updated: 06:37 GMT, Sep 14, 2017 | Published: 06:34 GMT, Sep 14, 2017 |
0 Comments
1259
This post was written by : Elakkiya

ரஷ்யாவில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) மொஸ்கோவில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிரெம்ளினுக்கு அருகிலுள்ள ஆடம்பர கடைகள் மற்றும் பொது இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் மேற்படி அச்சுறுத்தலால் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ரஷ்யாவின் வெவ்வேறு இடங்களில் இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட நிலையில், பாடசாலைகள், கடைகள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள் என அனைத்திலும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் இதுவரை கிடைக்கபெற்ற அனைத்து அச்சுறுத்தல்களும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேற்படி அச்சுறுத்தல்கள் எங்கிருந்து கிடைக்கப்பெற்றன என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் ரஷ்யாவுக்கு வெளியிலிருந்தே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg