Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Nokia வெளியிடும் புதிய ஸ்மாட் phone: என்ன சிறப்பம்சங்கள்?

In அறிவியல்
Updated: 07:08 GMT, Sep 14, 2017 | Published: 07:05 GMT, Sep 14, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Kemasiya
nokia-smartphone-1200x0

Nokia-8  என்னும் பிளாஷிப் ஸ்மாட் போனை தொடர்ந்து Nokia 2 ஸ்மாட் phone வெளியிட எச்.எம்.டி குளோபல் தயாராகி வரும் நிலையில் Nokia 2 ஸ்மாட் phone 4000எம்.ஏ.ஏச் மின்கலம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் Nokia 8 ஃபிளாக்ஷிப் ஸ்மாட் phone வெளியிட்டதை தொடர்ந்து எச்எம்டி குளோபல் நிறுவனம் Nokia2  ஸ்மாட் phone வெளியிட இருக்கிறது. குறித்த Nokia 2 ஸ்மாட் phone சார்ந்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் Nokia 2 ஸ்மாட் phone 4000 எம்ஏஎச் மின்கலம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை வெளியானதில் அதிக திறனுள்ள மின்கலம்  கொண்ட ஸ்மாட் phone இது இருக்கும். எட்ரி லெவல் ஸ்மாட் phone என்ற வகையில் இந்த ஸ்மாட் phone ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் நின்று பிடிக்கும் என கூறப்படுகின்றது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி Nokia 2 ஸ்மாட் phone இல்  5.0 இன்ச் எச்டி 720 பிக்சல் டிஸ்ப்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட் மற்றும் ஸ்டாக் அண்ட்ரொய்ட் நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg