Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதாவுல்லா விடுக்கும் செய்தி!

In
Updated: 06:35 GMT, Sep 14, 2017 | Published: 06:34 GMT, Sep 14, 2017 |
0 Comments
1456
icon_com
This post was written by : Varshini
Athaullah - 0123

20ஆவது திருத்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லா, மஹிந்த ராஜபக்ஷ சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எந்தவொரு தரப்பும் அதற்கு ஆதரவளிக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இத் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரியும் தமது கட்சிக்காரர்களுக்கு கூறக்கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தத்துக்கு தேசிய காங்கிரஸின் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில், அக்கரைப்பற்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு இணைப்புக்காகவும், சமஷ்டி ஆட்சி முறைமையைக் கொண்டு வருவதற்காவுமே, 20ஆவது திருத்தத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துளளதாக குறிப்பிட்டுள்ள அதாவுல்லா, வடக்கு – கிழக்கு இணைப்புக்கான முஸ்தீபினை தடுப்பதற்குத் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டுமானால், தேர்தல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர முடியும். அதை விடுத்து, 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருதல் முறையல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg