Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீள் கட்டமைப்புக்கு மேலதிகமாக நிதியளிக்கும் பிரித்தானியா- வரவேற்கும் பொரிஸ் ஜோன்சன்

In
Updated: 06:55 GMT, Sep 14, 2017 | Published: 06:55 GMT, Sep 14, 2017 |
0 Comments
1277
This post was written by : Elakkiya

இர்மா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டமைப்புக்காக பிரித்தானிய அரசாங்கத்தால் மேலதிகமாக வழங்கப்படும் 25 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவியை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் வரவேற்றுள்ளார்.

இர்மா புயலினால் மிக அதிளவில் பாதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதேசமான அங்கியுலா பகுதிகளை நேற்று (புதன்கிழமை) பார்வையிட்ட பொரிஸ் ஜோன்சன் அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அங்கியுலா பகுதிகளை மீள் கட்டமைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் இணைந்து பணியாற்றும் என ஜோன்சன் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த வெர்ஜின் தீவுகளையும் பொரிஸ் ஜோன்சன் பார்வையிட்டுள்ளார்.

கடந்த வாரம் கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா புயலினால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் அங்கியுலா பகுதியைச் சேர்ந்த நால்வரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg