Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம்: ஜப்பான் பிரதமர்

In இந்தியா
Updated: 10:59 GMT, Sep 14, 2017 | Published: 06:57 GMT, Sep 14, 2017 |
0 Comments
1317
icon_com
This post was written by : Ravivarman
201709141102087995_I-will-do-whatever-I-can-for-India-Japanese-PM-Shinzo-Abe_SECVPF

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பானால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத்தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.

மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்திற்கான தொடக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த தீர்வாக ஜப்பானின் உதவியை பிரதமர் மோடி தேர்ந்தெடுத்துள்ளார். நாங்கள் எங்களது முழுமையான ஒத்துழைப்பை தருவோம்.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்காக ஜப்பான் தனது முழுமையான பங்களிப்பையும் வழங்க உள்ளது. அடுத்த முறை நான் இங்கே வரும் போது புல்லட் ரெயிலில் பிரதமர் மோடியுடன் வரவேண்டும் என்பது எனது விருப்பம்.

இந்தியா நிச்சயமாக என்னை கவர்ந்திருக்கிறது. இந்தியாவுக்கு தேவைப்படும் அனைத்து அபிவிருத்தித்திட்ட உதவிகளையும் செய்வேன். எதிர்காலத்தில் இந்தியா – ஜப்பான் உறவானது உலகளவில் சிறப்பான ஒன்றாக இருக்கும்” என ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg