Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லி ஒரு துப்புரவுப் பணியாளர்: ஆஸி. பத்திரிக்கையாளரின் கருத்தால் கொதித்தெழுந்த இரசிகர்கள்

In கிாிக்கட்
Updated: 07:24 GMT, Sep 14, 2017 | Published: 07:22 GMT, Sep 14, 2017 |
0 Comments
2001
This post was written by : Anojkiyan

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை அவுஸ்ரேலிய பத்திரிகையாளர் ஒருவர் துப்புரவுப் பணியாளர் என்று கூறியதற்கு இந்திய இரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்துக்காக கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கோஹ்லி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஈடன் கார்டன் மைதானத்தைச் சுத்தம்செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவுஸ்ரேலியப் பத்திகையாளர் டென்னிஸ் ப்ரீட்மேன் என்பவர், உலக பதினொருவர் போட்டிக்காகத் துப்புரவுப் பணியாளர்கள் மைதானத்தைச் சுத்தப்படுத்துகிறார்கள் என டுவிட் செய்துள்ளார்.

இதனை பார்த்த கோஹ்லியின் இரசிகர்கள் இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். அத்தோடு பாகிஸ்தான் இரசிகர்களும், நாங்களும் கோஹ்லி மீது அதிக மரியாதை வைத்துள்ளோம், இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் என பதிவிட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg