Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வு! – காண்பியக்கலைக் காட்சி

In இலங்கை
Updated: 07:13 GMT, Sep 14, 2017 | Published: 07:13 GMT, Sep 14, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Puvanes
batti001

“பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் மூன்றாவது காண்பியக்கலைக் காட்சித் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15, 16, மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்ச்சியானது மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள பேர்டினன்ஸ் மண்டபத்தில் காலை 9.30 தொடக்கம் மாலை 5.00 வரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெண்களுக்கும் அனைத்து மனிதர்களுக்கும் எதிரான வன்முறைகளற்ற வாழ்வு கொண்டாடப்பட வேண்டியது அவசியம்.

பொதுவாக வன்முறைகளை உருவாக்குவதில் ஊடகங்களுக்கும் கலைகளுக்கும் எவ்வளவு பங்கு காணப்படுகின்றதோ அதே அளவு பங்கு வன்முறைகளற்ற வாழ்வை உருவாக்குவதிலும் காணப்படுகின்றது.

அத்தகைய மகிழ்வான வாழ்வை உருவாக்குவதில் ஒரு சிறு பங்கு வகிப்பதற்காக இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்கள் ஒன்றிணைந்து “வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்” என்ற குழுவை உருவாக்கியுள்ளனர் என குறித்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியக்கண்காட்சியில் கமலா வாசுகி, ஆர். நிர்மலவாசன், எஸ்.பி. புஷ்பகாந்தன், ப. நிரஞ்சன், கோ. மதிஸ்குமார், சி. யசோதாரினி, எம்.ரீ.எப். ருக்ஸானா, ரீ.வினோஜா, ஆ. எம். நிருபா, எஸ். தனுசியா, ஏ. லுஜிதன், ஏ. குகதீசன், ஏ. ஜதீஸ்குமார், வை. ஜகேன் ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

batti002

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg