Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் செயலாளரது எதிர்காலம் சட்டமா அதிபர் கையில்!

In இலங்கை
Updated: 11:29 GMT, Sep 14, 2017 | Published: 07:28 GMT, Sep 14, 2017 |
0 Comments
1325
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
attorney

நிதிமோசடி குற்றச்சாட்டில் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு பிணை வழங்குவது குறித்து விளக்கமளிப்பதற்கு, சட்டமா அதிபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த பிணை விண்ணப்பம், இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, இவ்விடயம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி சட்டமா அதிபரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதி கிஹான் குலதுங்க, அதன் பின்னரே பிணை கோரிக்கை தொடர்பாக தீர்மானிக்க முடியுமென குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தி பௌத்த மத அனுட்டானங்களுக்கு பயன்படுத்தப்படும் ‘சில்’ துணிகளை விநியோகம் செய்த குற்றச்சாட்டில், லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவிற்கு கடந்த வாரம் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg