Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் சுத்திகரிக்கப்படும் கடற்கரைகள்

In வணிகம்
Updated: 08:00 GMT, Sep 14, 2017 | Published: 08:00 GMT, Sep 14, 2017 |
0 Comments
1374
This post was written by : Kemasiya

கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை டோக்கியோ சீமெந்து ஆகியன இணைந்து திருகோணமலையில் 15கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

தேசிய கடற்கரை மற்றும் கடல்வள பாதுகாப்பு வாரம் செப்ரெம்பர் 15-22 வரை அனுஸ்டிக்கப்படும் நிலையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் டோக்கியோ சீமெந்து ஆகியன உலகின் புகழ் பெற்ற கடற்கரை பகுதியை தூய்மையாக்க தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் புறாத்தீவு நிலாவெளி அலஸ் கார்டின் மற்றும் டச்சு குடா ஆகிய கடற்கரைகள் சுத்தம் செய்யப்படவுள்ளன.

சர்வதேச கடற்கரை சுத்திகரிப்பு தினமான நாளை(வெள்ளிக்கிழமை) இலங்கை 14 கடற்கரை மாவட்டங்களில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை கடற் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை மூலம்  முன்னெடுத்துள்ளது.

கொழும்பு மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு மட்டக்குளி காக்கை தீவு கடற்கரை பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது போன்று 14 மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகள் செப்ரெம்பர் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான கடல் சுத்திகரிப்பு வாரத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg