Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பெலாரஸூடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்தது ரஷ்யா

In ஐரோப்பா
Updated: 08:15 GMT, Sep 14, 2017 | Published: 08:14 GMT, Sep 14, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Elakkiya
drill

மொஸ்கோ மற்றும் நேட்டோ கூட்டணிக்கு இடையில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் பெலாரஸூடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா ஆரம்பிக்கின்றது.

இன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படும் ஸபாட்- 2017 என்ற பெரியளவிலான பயிற்சிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பால்டிக் கடற்பகுதி முழுவதும் மேற்கு ரஷ்யா, பெலாரஸ் மற்றும் கலினின்கிராட் ரஷ்ய பகுதிகளில் நடைபெறவுள்ளது.

தற்காப்பு நடவடிக்கை என்று மொஸ்கோவால் அழைக்கப்படும் இந்த பயிற்சிகளில் 12 ஆயிரத்து 700 துருப்புக்கள், 70 போர் விமானங்கள் 250 யுத்த தாங்கிகள் மற்றும் 10 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இவ்வாறிருக்க ரஷ்யாவில் பயிற்சிகளை மேற்கொள்ளும் துருப்புக்களின் எண்ணிக்கையை ரஷ்யா குறைவாக காட்டியிருப்பதாகவும் போர்ப் பயிற்சிகளுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களை மொஸ்கோ ஈடுபடுத்தியுள்ளதாகவும் நேட்டோ கூட்டணி உறுப்பினர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டு ரஷ்யாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கிழக்கு உக்ரைனில் மோதல் வெடித்ததிலிருந்து ரஷ்யா மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளுக்கு இடையிலான உறவுகள் துண்டிக்கப்பட்டன. ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுடன் இடம்பெறும் கிழக்கு உக்ரைன் போரில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)