Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாட்சியமளிக்க விருப்பமில்லை! – அர்ஜூன் அலோசியஸ்

In இலங்கை
Updated: 07:52 GMT, Sep 14, 2017 | Published: 07:52 GMT, Sep 14, 2017 |
0 Comments
1305
This post was written by : Varshini

மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்க விரும்பவில்லையென, பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், கடந்த ஒரு வார காலமாக அர்ஜூன் அலோசியஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், ஆணைக்குழுவில் முன்னிலையாகுவதில் தமது கட்சிக்காரருக்கு உடன்பாடில்லையென அர்ஜூன் அலோசியஸின் சட்டத்தரணிகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து, முறிகள் மோசடி தொடர்பான விசாரணைக்கு அர்ஜூன் அலோசியஸின் சாட்சி முக்கியமாக அமைந்துள்ள போதும், அவரை சாட்சியமளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாதென ஆணைக்குழு நேற்று அறிவித்தது.

ஆணைக்குழுவின் இந்த நிலைப்பாட்டிற்கு சட்டமா அதிபர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg