Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் புனித அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

In இலங்கை
Published: 08:13 GMT, Sep 14, 2017 |
0 Comments
1367
icon_com
This post was written by : Puvanes

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார் திருச் சொரூபம் இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட, அடம்பன் பொலிஸ் பகுதியில் உள்ள நாயாற்று வழி பிரதான வீதிக்கு அருகில், கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 அடி உயரம் கொண்ட புனித அந்தோனியர் திருச் சொரூபமே இவ்வாறு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

mannar002

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg