Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

18 ஆண்டுகளாக பதவியில் இருந்தவருக்கு வசை பாடியதால் கிடைத்த பரிசு

In விளையாட்டு
Published: 09:20 GMT, Sep 14, 2017 |
0 Comments
1340
icon_com
This post was written by : Anojkiyan
wer

18 ஆண்டுகளாக அவுஸ்ரேலியா ஒலிம்பிக் குழுவின் ஊடகதுறை தலைவராக இருந்த மைக் டன்கிரீட் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டபோதிலும், ஒலிம்பிக் குழுவை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர் நேற்று (புதன்கிழமை) பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு அவுஸ்ரேலியா ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர் ஃபியோனா டீ ஜோங் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்களை மைக் டன்கிரீட் தகாத வார்த்தைகளால் வசைப்பாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனால் சுயாதீன விசாரணைக் குழு விசாரணைகளை மேற்கொண்டது. இதில் அவர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இதன் பின் குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டபோதிலும், ஒலிம்பிக் குழுவை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மைக் டன்கிரீட் தலைவர் பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg