Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்களின் கீழ் வீக்கம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

In
Updated: 09:23 GMT, Sep 14, 2017 | Published: 09:23 GMT, Sep 14, 2017 |
0 Comments
1287
This post was written by : Kemasiya

பெரும்பாலும் ஏதேனும் விழாக்களுக்கு செல்வதென்றால் பெண்கள் முதல் நாள் தான் அழகுக்கலை நிலையங்களுக்கு செல்வார்கள். முதல் நாள் புருவம் எடுப்பது பேஷியல் செய்வதனால் சிலருக்கு முகம் அல்லது கண் வீங்கக்கூடும்.

இவ்வாறு கண் மறு நாள் காலையில் எழும்பும் பொழுது கண் வீங்கிக் காணப்படம் என்பதை முற்கூட்டியே அறிவீர்களாயின் கீழ்வரும் விடயங்களை கடைப்பிடித்தால் கண்கள் வீக்கமின்றி நீங்கள் செல்வதற்கு தயாராகவுள்ள விழாவிற்கு இன்முகத்தோடு செல்லமுடியும்.

1- இரவு தூங்குவதற்கு முன்னர் சுடு நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள்.

2-புருவம் எடுத்திருந்தால் புருவத்தின் மேல் வெங்காயத்தினால் மசாஜ் செய்யுங்கள்.

3-இரவு முகம் கழுவுவதற்கு முன்னர் கண்களின் மேல் வெள்ளரிக்காயை வைத்து 30 நிமிடங்கள் விட்டு அதன் பின்னர் கழுவுங்கள்.

4. அதிகநேரம் நித்திரை செய்வதால் உங்கள் கண்கள் வழமையில் வீங்குவதாயின். தூக்கத்தை 5மணித்தியாலத்திற்கு மேல் கொள்ளாதீர்கள்.

5-போதிய நித்திரை இல்லாவிட்டாள் தான் உங்கள் கண்கள் வீங்கும் என்றால் கட்டாயம் 8மணித்தியாலங்கள் தூங்குங்கள்.

இதனை செய்தால் மறு நாள் காலையில் கண்கள் வீங்கியிருப்பதை தவிர்க்கமுடியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg