Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் புதிய கட்டடம் திறந்துவைப்பு!

In இலங்கை
Updated: 09:28 GMT, Sep 14, 2017 | Published: 09:25 GMT, Sep 14, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Vithushagan
DSC_1639

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழுள்ள ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் மூன்று மாடிகளைக் கொண்ட வகுப்பறை மற்றும் நிருவாகக் கட்டிடம் நேற்று (புதன்கிழமை)  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக தகரக் கொட்டிலில் இயங்கிவந்த குறித்த பாடசாலையில் 250 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர்.

குறித்த பாடசாலையின் அவலத்தை அறிந்து கொண்டதின் பின்னர் இக்கட்டிட நிருமாணத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் 15 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபர் எம்.எல்.எம். பைஷல் தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில்; முதலமைச்சருடன் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கேபி.எஸ். ஹமீட், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். இஸ்மாயில் ஆகியோரும் அதிகாரிகள், அபிவிருத்தி குழுவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_1672 DSC_1704 DSC_1707 DSC_1714

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg