Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர்கள் தமது பதவிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்! – எச்சரிக்கும் நாமல்

In இலங்கை
Updated: 09:21 GMT, Sep 14, 2017 | Published: 09:21 GMT, Sep 14, 2017 |
0 Comments
1469
This post was written by : Puvanes

நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சனம் செய்த காரணத்தினாலேயே அருந்திக்க பெர்னாண்டோ பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரதியமைச்சராக பதவியில் வகித்த அருந்திக்க பெர்னாண்டோ பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் நாமல் கருத்து வெளியிடும் போதே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், அரசாங்கத்தை சரியான வழியில் கொண்டு செல்வதற்காகவே அருந்திக்க முயற்சி செய்தார். அதற்கு கிடைத்த பலனாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் ஜனநாயகம் காணப்படுவதாக கூறப்படுவதில் உண்மைகள் கிடையாது எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் ஒடுக்கு முறை ஆட்சியினை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டும் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg