Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஐவருக்கு விளக்க மறியல்!

In இலங்கை
Updated: 09:37 GMT, Sep 14, 2017 | Published: 09:37 GMT, Sep 14, 2017 |
0 Comments
1303
icon_com
This post was written by : Vithushagan
S4910002

கொழும்பிலிருந்து மட்டக்களப்பில் ஹெரோயின் கடத்தி விற்பனை செய்த ஐவருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் என்பன 14 நாள் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மூன்று சந்தேக நபர்களையும்; ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசத்தில் நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுவந்த ஐவரை மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையிலான மதுவரி அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் சுமார் 16 மணிநேர சுற்றிவளைப்பின்போது காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் வைத்து மாறுவேடத்திலிருந்த மதுவரி அதிகாரிகளுக்கு ஹெரோயின் விற்பனை செய்த நிலையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்று மாலை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது கொழும்பு மாளிகாவத்தை மற்றும் வத்தளை பகுதிகளிலிருந்து குறித்த கும்பல் ஹெரோயினைக் கடத்திவந்து இப்பிரதேசங்களில் நீண்டகாலமாக விற்பனை செய்துவந்துள்ளதாக மதுவரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த கடத்தில் காரார்களிடமிருந்து பல ஹெரோயின் பக்கட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

S4910004

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg