Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லல்லுபிரசாத்தின் மகன் மீது வழக்குத் தாக்கல்!

In இந்தியா
Updated: 09:56 GMT, Sep 14, 2017 | Published: 09:56 GMT, Sep 14, 2017 |
0 Comments
1211
This post was written by : Ravivarman

வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததற்காக லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ்பிரதாப் யாதவ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா எம்.எஸ்.சி.சுராஜ்நந்தன் பிரசாத் பாட்னா முதன்மை மாஜிஸ் திரேட்டு நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) மனுத்தாக்கல் செய்தார். அதில் சொத்து விவரங்களை மறைத்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஜ்பிரதாப் யாதவ் 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg