Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் மோசடி தொடர்பில் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் சாட்சி

In கனடா
Published: 10:13 GMT, Sep 14, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Anojkiyan
aan

லிபரல் கட்சி உறுப்பினர்கள் இருவர் தேர்தல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், விசாரணைக் குழு முன்பாக நேற்று (புதன்கிழமை) சாட்சியமளித்துள்ளார்.

குறித்த வழக்கில் முதல்வர் கத்தலின் வின் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை என்ற போதிலும், தேர்தல் காலப்பகுதியில் எவ்வாறான அறிவுறுத்தல்களை இவர் குறித்த அந்த இருவருக்கும் வழங்கினார் என்ற விபரங்களை விசாரணையாளர்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இடைத்தேர்தலின் போது முதல்வர் கத்தலின் வின்னின் முன்னாள் துணை அதிகாரி மற்றும் லிபரல் தேர்தல் பரப்புரை செயற்பாடுகளின் இயக்குனர் பாட் சோர்பரா மற்றும் உள்ளூர் லிபரல் அமைப்பாளரான ஜெரி லொக்கீட் ஆகிய இருவரும் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், பாட் சோர்பரா மீது இரண்டு குற்றச்சாட்டுகளும், ஜெரி லொக்கேட் மீது ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 25,000 டொலர்கள் வரையிலான அபராதம், மற்றும் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை என்பன விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg