Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓய்வை அறிவித்தார் ஓபெரா பாடகி!

In
Updated: 10:03 GMT, Sep 14, 2017 | Published: 10:01 GMT, Sep 14, 2017 |
0 Comments
1272
This post was written by : Varshini

உலக புகழ்பெற்ற ஓபெரா பாடகியான Dame Kiri Te Kanawa தனது வசீகர குரலுக்கு முற்றாக ஓய்வுகொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஓபெரா மேடை நிகழ்ச்சிகளில் இருந்து கடந்த 2004ஆம் ஆண்டே ஓய்வுபெற்ற இவர், அதனைத் தொடர்ந்து உலகலாவிய ரீதியில் பல்வேறு கச்சேரிகளில் பாடிவந்தார்.

தற்போது 73 வயதாகியுள்ள நிலையில், இசைத்துறையில் பலரை பயிற்றுவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள Dame Kiri Te Kanawa,  இனியும் தமது சொந்தக் குரலை கேட்க விரும்பவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

Frederica von Stade, Jose Carreras மற்றும் Placido Domingo உள்ளிட்ட பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களுடன் சுமார் ஐந்து தசாப்தங்களாக பாடி வந்த Dame Kiri Te Kanawa, கடந்த 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற The Marriage of Figaro என்ற இசைநிகழ்ச்சியில் பாடியதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.

நியூசிலாந்தை பிறப்பிடமாகக் கொண்ட Dame Kiri Te Kanawa, எவ்வித குரல் தேர்வும் இன்றி லண்டன் ஒபெரா இசைப்பயிற்சி நிலையத்தில் கடந்த 1966ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டு பயற்சி பெற்றார். அதற்கு அடுத்த வருடமே, லண்டனைச் சேர்ந்த டெஸ்மண்ட் பார்க் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். பின்னாளில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg