Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லீம்களை கிழக்கு மாகாணசபை காட்டிக் கொடுத்துள்ளது – அதா உல்லா

In இலங்கை
Updated: 09:59 GMT, Sep 14, 2017 | Published: 09:55 GMT, Sep 14, 2017 |
0 Comments
1081
icon_com
This post was written by : elayathambi
athaullah

20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை கிழக்கு மாகாணசபை ஏற்றிருப்பது அங்கிருக்கும் மக்களைக் காட்டிக் கொடுத்த செயல் என தேசிய காங்கிரசின் தலைவர் அதா உல்லா சாடியுள்ளார். கிழக்கையும் வடக்கையும் இணைப்பதன் மூலம் முஸ்லீம் மக்களை மாகாண சிறுபான்மையாக்கும் முயற்சியே 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்தின் நோக்கம் என ஊடகவியலாளர் மகாநாடொன்றில் அவர் விளக்கமளித்திருக்கிறார்.

இச் சீர்திருத்தம் சமஷ்டி நோக்கியது எனக் கூறி இருக்கும் அதா உல்லா,   கிழக்கு மாகாணசபை, முஸ்லீம் காங்கிரசினதும்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கைகளில் இருப்பது சாபக் கேடு எனவும் விமர்சித்திருக்கிறார்.

20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை முன்மொழியும் இரா சம்மந்தனும், சுமந்திரனும். ரவூப் ஹக்கீமும் கிழக்கு மக்களுக்கு அநீதி இழைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg