Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காய்கறி: பழங்கள் சேர்ந்த சுவையான சலட்

In
Published: 10:03 GMT, Sep 14, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Kemasiya
201709071059333764_fruits-and-vegetable-salad-recipes_SECVPF

புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும் காய்கறிகள் பழங்கள் சேர்த்து சலட் சாப்பிடுவது நல்லது. இன்று பழங்கள் காய்கறிகள் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டைகோஸ் – 100 கிராம்
வெள்ளரிக்காய் – 2
குடமிளகாய் – 1
தக்காளி – 3
ஸ்ரோபரி – 5
அப்பிள் – 1
திராட்சை – 100 கிராம்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
மிளகு தூள் – அரை ஸ்பூன்.

செய்முறை :

ஸ்ரோபரி  தக்காளியை (விதை நீக்கி) நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெள்ளரிக்காய், குடமிளகாய், அப்பிளை பெரிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.

முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கி காய்கறிகள், பழங்களை சேர்த்து இவற்றுடன் திராட்சையைச் சேர்த்து போட்டு நன்றாகக் கலக்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாறு, உப்பு. தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான காய்கறி பழங்கள் மிக்ஸ்டு சலட் ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)