Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய கட்சி அமைத்து அரசியலில் ஈடுபடுவதற்க நடிகா் கமல் தீா்மானம்!

In இந்தியா
Updated: 12:07 GMT, Sep 14, 2017 | Published: 10:12 GMT, Sep 14, 2017 |
0 Comments
1280
icon_com
This post was written by : Ravivarman
kamalhaasan

இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டதால் அதில் பல மாற்றங்கள் வரவேண்டும் எனவும் எந்த கட்சியிலும் சேராமல் ஊழலை ஒழிக்க தனிக்கட்சி தொடங்குவேன் எனவும் நடிகா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இணையதளம் ஒன்றுக்கு அவா் கருத்து வெளியிட்டபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மாற்றத்தை கொண்டு வர சிறிது தாமதம் ஆகலாம். அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தொடங்குவேன். மாற்றத்தை நான் முன்னெடுத்துச் செல்வேன்.

இது என் வாழ்நாளில் கூட நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள். 5 வருடம் தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர் சிறப்பாக செயற்படாவிட்டால் 5 வருடங்கள் காத்து இருந்து ஓட்டுப் போட்டு மாற்றும் நிலை இருக்க கூடாது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் உடனே அவர்களை மாற்றும் நிலை வரவேண்டும். புதிய மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும்” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg