Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் கேலிக்கூத்து அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

In இந்தியா
Published: 10:29 GMT, Sep 14, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Ravivarman
60878_thumb

தமிழ்நாட்டில் நடக்கும் கேலிக்கூத்து அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலில் மிக முக்கிய திருப்பங்களுக்கு வித்திட்ட தமிழகத்தில் இன்று அரசியல் படும்பாடு தமிழக மக்களை தலைகுனிய வைத்திருக்கிறது.

இத்தகையக் கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்காமல் அநாகரிக அரசியலுக்கு அனைத்து வழியிலும் ஆளுனர் துணைபோவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் எப்படியாவது, யார் காலில் விழுந்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், எடப்பாடி அரசை எவ்வழியிலாவது கவிழ்த்து விட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் தினகரன் அணிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது.

இருவருமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட ஆட்சியின் எஞ்சிய பதவிக்காலம் மூன்றரை ஆண்டுகளை அனுபவித்து முயன்றவரை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான் இரு தரப்பினரின் நோக்கம் ஆகும்.

இவர்களுக்கு இடையிலான மோதலில் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படுவதால் இதற்கு முடிவுகட்ட வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)