Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டை காக்க பிக்குகள் முன்வரவேண்டும்! – ஒலிக்கின்றது தேரரின் குரல்

In இலங்கை
Updated: 10:30 GMT, Sep 14, 2017 | Published: 10:29 GMT, Sep 14, 2017 |
0 Comments
1471
icon_com
This post was written by : Puvanes
srilanka_monks001

தற்போதைய நிலையில் நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியல் இல்லை என கெட்டம்பே விகாராதிபதி சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற பிக்குமார் சம்மேளனம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், புதிய அரசியலமைப்பில் பெயரில் நாட்டின் ஐக்கியத்தினை சீர்குலைத்து, சமஷ்டி என நாட்டை பிளவுபடுத்தவும் தற்போதைய அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையினை இல்லாமல் செய்ய நல்லாட்சி அரசாங்கம் முயன்று வருவதாகவும் சிறிவிமல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலைப்பு காரணமாக பொலிஸார் சட்டத்தை பாரபட்சமாக முன்னெடுக்கும் நிலை ஏற்படக்கூடும், இந்த நிலையில் பிக்குமார்கள் நாட்டை பாதுகாப்பதற்காக முன்வரவேண்டும் எனவும் சிறிவிமல தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg