Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலையற்ற நிலையில் மீட்கப்பட்ட சடலம்: பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்

In கனடா
Published: 10:56 GMT, Sep 14, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Anojkiyan
torso-found-in-water

ஒன்ராறியோ ஏரியில், ஒஷாவா துறைமுகப் பகுதியில் தலையற்ற மனித முண்டம் ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டூர்ஹாம் பிராந்தியத்தில், துறைமுக வீதிக்கு தெற்கே, சிம்கோ வீதிப் பகுதியில் இருந்து நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 அளவில் இந்த சடலம் மீட்கப்பட்டது.

ஆனால் தலையற்ற நிலையில் காணப்படுவதனால் அந்த சடலத்துக்குரிய நபரை அடையாளம் காண்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும், அடையாளம் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம், குறித்த அந்த பகுதியின் நீர் மற்றும் நிலப் பிராந்தியங்களில் தேடுதல்களையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg