Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவனின் உடுக்கையும் சூலாயுதமும்

In ஆன்மீகம்
Published: 10:45 GMT, Sep 14, 2017 |
0 Comments
1290
icon_com
This post was written by : Kemasiya
04-1451883496-5-lord-shiva-kamadeva-7-story

உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலியை ஒலிக்கிறது. உடுக்கையை அடிக்கும் போது ஓம் என்ற பிரணவ மந்திர ஒலி பிறக்கிறது. இந்த நாத ஒலி பிரபஞ்ச ஆக்கத்தின் பிறப்பிடம். பிரபஞ்சப் படைப்பை ஆக்கும் ஆனந்தத் தாண்டவத்தைத் தொடங்கும் முன்னர் சிவன் உடுக்கையை 14 முறை அடிக்கிறார்.

இது பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையான சாத்திரத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பிரபஞ்ச இயக்கத்துக்குத் தேவையானவற்றை உருவாக்கிய பின்னர் சிவன் ஆனந்தத் தாண்டவத்தை தொடங்குகிறார். ஆகவே உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலிக்குறிப்பாகும்.

அதே போன்று மூன்று முனைகளைக் கொண்ட சூலாயுதம் சிவனின் இச்சா கிரியா மற்றும் ஞான சக்தியை குறிக்கிறது. இச்சையினால் படைத்தலும் கிரியையால் காத்தலும் ஞானத்தினால் நன்மை பெறுதலும் ஆகும். இந்த ஆயுதம் வல்வினைகளை அழித்து நன்மை பயப்பவை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg