Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியா கொலை வழக்குத் தீர்ப்பில் பிரபாகரன் ஆதிக்கம்!

In இலங்கை
Updated: 13:08 GMT, Sep 14, 2017 | Published: 11:29 GMT, Sep 14, 2017 |
0 Comments
10886
icon_com
This post was written by : Varshini
prabagaran n jaffna high court

வித்தியா கொலை வழக்கின் தீா்ப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவா் வே. பிரபாகரன் தாக்கம் செலுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனா்.

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில் எதிரிகள் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை, யாழ். மேல் நீதிமன்றில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) வழங்கப்பட்டது.

இதன்போது, வழக்கின் 4ம், 7ம் மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன், குற்றச்செயல் இடம்பெற்ற காலப்பகுதியான கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, தமது தரப்பினர் யாழ்.மாவட்டத்திலேயே இருக்கவில்லை என்றும், கொழும்பிலேயே இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி இளஞ்செழியன்,  ”கொழும்பே தெரியாத பிரபாகரனுக்கு, கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் 200 வருட சிறை தண்டனை விதித்து. ஆகவே, குற்றம் இடம்பெற்ற இடத்தில் குற்றவாளிகள் இருந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு திட்டம் தீட்டிய குற்றத்திற்கு தண்டனை வழங்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றச்செயலுக்கு உடந்தையாக செயற்பட்டமை மற்றும் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றங்களே, சம்மந்தப்பட்டவா்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதால், சந்தேகநபா்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இல்லை என்பதை ஆதாரமாக கருத முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

எதிா்வரும் 27 ஆம் திகதி வித்தியா கொலை வழக்கிற்கான தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், நீதிமன்றங்களின் முற்தீா்ப்புக்களை முன்மாதிரியாக கருத்தில் எடுத்து தீா்ப்புக்களை வழங்க சட்டத்தில் ஏற்பாடுகள் இருப்பதனால், பிரபாகரனுக்கு வழங்க்பட்ட தீா்ப்பு  வித்தியா கொலை வழங்கின் தீா்ப்பில் தாக்கம் செலுத்தும் என அவதானிகள்  தெரிவித்துள்ளனா்.

1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடா்பில் நடைபெற்ற வழக்கில் பிரபாகரனுக்கு எதிராக குற்றச் செயலுக்கு உடந்தையாக செயற்பட்டமை மற்றும் திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் பிரபாகரனுக்கு எதிராக சுமத்தப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் 200 வருட சிறைத் தண்டனை வழங்கி தீா்ப்பளித்திருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg