Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியுடன் கோபம் இல்லை! – ஆட்சி கவிழ்க்கப்படும் என்கின்றார் பதவி பறிபோன அமைச்சர்

In இலங்கை
Updated: 10:59 GMT, Sep 14, 2017 | Published: 10:59 GMT, Sep 14, 2017 |
0 Comments
1586
icon_com
This post was written by : Puvanes
maithipala001

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கப்போவதாக முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளிலும் நல்லவர்கள் காணப்படுகின்றார்கள். எனக்கு ஜனாதிபதி மீது அதிருப்தி இல்லை, நல்லாட்சி அரசாங்கத்தின் மீதே அதிருப்தி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அருந்திக்க இதனைக் கூறியுள்ளார்.

மேலும், அரசாங்கம் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சித்தேன் அதனால் அதில் எந்தவித தவறும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் பிளவுபட்டுள்ள சுதந்திரக்கட்சியை இணைத்து எதிர்காலத்தில் ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அருந்திக்க, 2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக முன்நிறுத்த கனவு காண்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயிலும், ஜனாதிபதியுடன் வைபவத்தில் கலந்துகொண்டதால், மீண்டும் பதவி பெற்றுக்கொள்வேன் எனவும், அரசாங்கம் கவிழாது எனவும் நினைப்பது தவறு எனவும் , அருந்திக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)