Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பலனுள்ள ஆலோசனைகளுக்காக காத்திருக்கும் ஃபிறீலான்ட்

In கனடா
Updated: 11:22 GMT, Sep 14, 2017 | Published: 11:15 GMT, Sep 14, 2017 |
0 Comments
1073
icon_com
This post was written by : Anojkiyan
criwe

இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மேலும் எவ்வாறு சிறப்பாக செயற்பட முடியும் என்ற ஆலோசனைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த பிராந்தியங்களில் உள்ளவர்கள், அங்கு எவ்வாறான உதவிகளை மேற்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்பதனையும் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் மீண்டும் ஒரு முறை இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், கனேடிய அரசாங்கத்தினால் எவ்வாறான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டால் பலனுள்ளதாக இருக்கும் என்ற பரிந்துரைகளையும் அறிந்துகொள்வதற்கு தான் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இர்மா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கனேடியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கனேடிய மத்திய அரசாங்கம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)