Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூகுளில் குரல் பதிவில் மொழிபெயர்ப்பு: இந்தியாவின் ஏழு மொழிகள்

In அறிவியல்
Published: 11:22 GMT, Sep 14, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Kemasiya
201709141303027453_Google-Translate-offline-feature-adds-support-for-seven_SECVPF

கூகுள் மொழிபெயர்ப்பு ஒஃப்லைன் பதிப்பில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகளை பயன்படுத்தும் வசதி புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டு ஒஃப்லைனிலும் ஏழு மொழிகளை வாடிக்கையாளர்கள்  மொழிபெயர்ப்பு  செய்ய முடியும்.

கூகுள் மொழிபெயர்ப்பு செயலி தானாக வாடிக்கையாளர்கள் பேசும் மொழியை அறிந்து கொண்டு சீரான உரையாடல் அனுபவத்தை வழங்கும். புதிய வசதியை பெற வாடிக்கையாளர்கள் மொழிகளை முதலில் டவுன்லோடு செய்ய வேண்டும்.  ஒஃப்லைன் வசதியை கொண்டு குறிப்பிட்ட வார்த்தை அல்லது வாக்கியத்தை இணய உதவியின்றி மொழிமாற்றம் செய்ய முடியும்.

சமீபத்தில் கூகுள் வாய்ஸ் இன்புட் சேவை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, மராட்டியம், வங்காளம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளுக்கு வழங்கப்பட்டது. கூகுளின் டிரான்ஸ்லேட் செயலி, வாடிக்கையாளர்களை ஆங்கில மொழி மீது கமரா காண்பிக்க செய்து தங்களுக்கு தேவையான மொழியில் அதனை மாற்றும் திறன் கொண்டுள்ளது.

அனைத்து வசதிகளும் தற்சமயம் இந்தி மொழிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மற்ற மொழிகளும் அண்ரொயிட்  மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் சேர்க்கப்பட்டு வருகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg