Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

”பிரியும் முடிவை நினைத்து வருந்துவீர்கள்” – பிரித்தானியாவுக்கு ஜங்கர் எச்சரிக்கை

In
Updated: 12:44 GMT, Sep 14, 2017 | Published: 12:44 GMT, Sep 14, 2017 |
0 Comments
1508
This post was written by : Varshini

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவிற்காக, பிரித்தானியா ஒருநாள் வருந்துமென ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் ஜேன் கிளோட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் முடிவை நினைத்து தாம் வருந்துவதாக தெரிவித்த அவர், விரைவில் பிரித்தானியாவும் அதனை உணருமென ஜங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் Strasbourg இல் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில், ஒன்றியத்தின் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரித்தானிய மக்களின் விருப்பத்தை தாம் மதிப்பதாக குறிப்பிட்ட ஜங்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலமாக பிரெக்ஸிட் அமையாதென குறிப்பிட்டார். ஆகவே, போதுமான முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியது அவசியமென மேலும் தெரிவித்தார்.

மேலும், பிரெக்ஸிட் நடவடிக்கைகளுக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், 27இற்கும் அதிகமான உறுப்பு நாடுகளை இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் ஜங்கர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய அமைப்பாகவுள்ள ஐரோப்பிய ஆணையகம், ஒன்றியத்தின் சட்ட நடைமுறைகள், முக்கிய தீர்மானங்களை செயற்படுத்துததல், ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான ஒப்பந்தங்களை கையாளுதல் மற்றும் அதன் 28 உறுப்பு நாடுகளின் நாளாந்த வர்த்தக நடவடிக்கைகளை நிர்வகித்தால் போன்ற பாரிய பொறுப்புக்களை ஆற்றி வருகின்றது.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி, ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு மறுநாள் ரோமானிய நகரான சிபியுவில் ஐரோப்பிய உச்சிமாநாட்டை நடத்துவதற்கான அறிவிப்பை ஜங்கர் விடுத்துள்ளார்.

இதேவேளை, ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான நடைமுறைகளுக்கு பிரித்தானியா உடன்பட்ட பின்னரே, பிரெக்ஸிட் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமென கடந்த மாதம் ஜங்கர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg