Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முடிந்தால் கைது செய்யவும், சட்டமா அதிபர் திணைக்களமே கைக்குள்! – சவால் விடும் முக்கியஸ்தர்

In இலங்கை
Published: 13:51 GMT, Sep 14, 2017 |
0 Comments
1311
icon_com
This post was written by : Puvanes
sajith001

தன்னை எவராலும் கைது செய்து சிறையில் அடைத்துவிட முடியாது என மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவர், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர் ஒருவரிடமே இவ்வாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சஜின் வாஸ் குணவர்தன கடந்த காலத்தில், அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் பணச்சலவை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவராவார்.

இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினை தனக்கு ஏற்ற வகையில் இயக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிரான அறிக்கையினை ஒரு வருட காலமாக தான் மறைத்து வைத்துள்ளதாகவும், தனக்கு விஷேட கவனிப்புகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக முடிந்தால் தன்னை சிறையில் அடைத்து பார்க்குமாறும் சஜின் வாஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளதாகவும் குறித்த ஊடகத்தின் செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg