Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி மைத்திரிக்கெதிராக வழக்குத் தாக்கல்?

In இலங்கை
Updated: 13:41 GMT, Sep 15, 2017 | Published: 02:57 GMT, Sep 15, 2017 |
0 Comments
1324
This post was written by : Anojkiyan

சீல் துணி விநியோகித்த விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமாயின், அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கெதிராவும் நடவடிக்கை எடுக்க முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய ஜனாதிபதி தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிதியை முஸ்லிம் விவகார ஊக்குவிப்புக்காக 65 மில்லியன் ரூபாய், பௌத்த சாசன மறுமலர்ச்சி நிதியாக 100 மில்லியன் ரூபாய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை புணரமைக்க 5000 மில்லியன் ரூபாய் என, வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அது முன்னெடுக்கப்படுவது தேர்தல்களுக்காக அல்ல. அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஷவும் சீல் துணி விநியோகத்தை மேற்கொண்டமை தேர்தலை இலக்கு வைத்து அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg