Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜப்பான் மூழ்கும் அமெரிக்கா சாம்பலாகும்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

In
Published: 03:47 GMT, Sep 15, 2017 |
0 Comments
1892
icon_com
This post was written by : Anojkiyan

உலகையே அச்சுருத்திவரும் வட கொரியா, மீண்டும் ஒரு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இந்த ஏவுகணை உள்ளூர் நேரப்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கும் சற்று முன்னதாக ஏவப்பட்டதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் வடக்கு பகுதிக்கு மேல் ஏவப்பட்ட குறித்த ஏவுகணை சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்திருக்கலாம் என்றும், 3,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கலாம் என்றும் ஜப்பான் மற்றும் தென் கொரியா தெரிவித்துள்ளன.

பசிஃபிக் பெருங்கடலில் சென்று விழுவதற்கு முன்பு, அந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேல் உள்ள வான்வெளியில் பறந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இது, வட கொரியா ஆறாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியத்தைத் தொடர்ந்து, ஐ.நா அந்நாடு மீது தடைகள் விதித்ததன் பின்னர் வட கொரியா மேற்கொள்ளும் முதல் ஏவுகணை சோதனையாகும்.

வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து 3,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, அமெரிக்காவின் பசிஃபிக் பிராந்தியமான குவாம் தீவை தாக்குவதற்கு இந்த ஏவுகணையின் தூரம் போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட கொரியாவின் இந்த அத்துமீறலான ஏவுகணை சோதனையால், அமெரிக்கா மற்றும் ஜப்பானின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டம் இன்று, (வெள்ளிக்கிழமை) அவசரமாக கூடவுள்ளது.

ஐ.நா விதித்துள்ள தடைகளைத் தொடர்ந்து, ஜப்பானை மூழ்கடிக்கப் போவதாகவும், அமெரிக்காவை சாம்பலாகப்போவதாகவும் வட கொரியா மிரட்டல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg