Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பௌத்த மதத்தை பாதுகாத்த குற்றத்திற்கே லலித் சிறையில்: மஹிந்த

In இலங்கை
Published: 04:33 GMT, Sep 15, 2017 |
0 Comments
1209
This post was written by : Ravivarman
download (1)

பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தியதால் லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் அரசியல் அமைப்பில் உள்ள பௌத்த மதத்தைப் பாதுகாத்தல், அதனைப் போஷித்தல் என்ற உறுப்புரையின் படி அரசாங்கத்தின் தலைவரிற்கு பொறுப்புள்ளது.

இவ்வாறு பொறுப்பை நிறைவேற்ற நாட்டின் தலைவரினால் வழங்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தியதனாலேயே லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg