Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவை எதிர்கொள்ள ஒரு வீரர் மட்டும் போதாது என்கிறார் ஆஸி வீரர்

In கிாிக்கட்
Updated: 04:57 GMT, Sep 15, 2017 | Published: 04:57 GMT, Sep 15, 2017 |
0 Comments
1529
This post was written by : Anojkiyan

இந்திய அணிக்கெதிரான தொடரில் ஒரு வீரரை மட்டும் நம்பி களம் இறங்கமாட்டோம் என அவுஸ்ரேலிய அணியின் சகலதுறை வீரரான ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய சிறந்த வீரர்களை கொண்டுள்ளோம்.அத்தோடு ஸ்டாய்னிஸ் மிகவும் சிறந்த வகையில் துடுப்பெடுத்தாடுகிறார். போல்க்னெர் சிறப்பாக பந்து வீசியவர். நாங்கள் ஒரு வீரரை மட்டும் நம்பி களம் இறங்கமாட்டோம்” என கூறினார்.

சென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான பயிற்சி போட்டியில், 4வது வீரராக களமிறங்கி 65 ஓட்டங்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg