Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத்தான் தெரியும்: ரோஹித் சர்மா

In கிாிக்கட்
Published: 05:53 GMT, Sep 15, 2017 |
0 Comments
1584
icon_com
This post was written by : Anojkiyan
rohi

என்னுடைய துடுப்பாட்டத்தை பார்க்க இரசிகர்களுக்கு எளிதாக இருக்கும், ஆனால், அது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத்தான் தெரியும் என இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டு தற்போது அணியில் ஜொலித்து வருவது குறித்து ஊடகமொன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்

”காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் களம் இறங்குவது எளிதான காரணமல்ல. இதெல்லாம் மனநிலையைப் பொறுத்தது. எனது துடுப்பாட்ட இரசிகர்கள் பார்ப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்ற உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும்.

ஐ.பி.எல். தொடரில் களம் இறங்கும்போது இந்த நிலைமை எனக்கு ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணிக்காக களம் இறங்கும்போது, எனக்கு காயம் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பது குறித்து நான் நினைத்து பார்க்கவில்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg