Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்தோனேசியாவின் உதவிப்பொருட்கள் பங்களாதேஸை சென்றடைந்தன

In உலகம்
Published: 09:47 GMT, Sep 15, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Varothayan

மியன்மாரில் இருந்து இடம்பெயர்ந்து பங்களாதேஸில் தஞ்சமடைந்துள்ள ரோஹின்ங்யா முஸ்லிம் மக்களுக்காக இந்தோனேசிய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மனிதாபிமான உதவிப்பொருட்கள் பங்களாதேஸின் துறைமுக நகரான சிட்டகொங்கை சென்றடைந்துள்ளது.

பங்களாதேஸில் ரோஹின்ங்யா முஸ்லிம் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள கொஸ் பஸார் பகுதிக்கு அரிசி, குடிநீர் மற்றும் கூடாரங்கள் அடங்கிய உதவிப்பொருட்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக பங்களாதேஸிற்கான இந்தோனேசியாவின் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ரோஹின்ங்யா முஸ்லிம்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற படை நடவடிக்கை காரணமாக, தங்கள் உயிர்களை கையில் பிடித்துக் கொண்டு லட்சக்கணக்கானவர்கள் பல்வேறு அண்டை நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஏறக்குறைய 4 இலட்சம் ரோஹின்ங்யா முஸ்லிம்கள் பங்களாதேஸில் அடைக்கலம் தேடிப்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, அதிகரித்துள்ள அகதிகளைத் தங்க வைப்பதற்காக அதிகளவிலான கூடாரங்கள் தேவைப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு சர்வதேச மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நிலையில், முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் நாடான இந்தோனேசியாவும் தனது குரலை ரோஹின்ங்யா மக்களின் வாழ்வுக்காக கொடுத்து வருகின்றது.

ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையே மியன்மாரில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மியன்மார் அரசாங்கம் குறிப்பிட்டு வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg