Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராட்டத்தை கைவிடக்கோரி உத்தரவு: சற்று முன் போராட்டம் ஒத்திவைப்பு

In இந்தியா
Published: 07:20 GMT, Sep 15, 2017 |
0 Comments
1204
This post was written by : Kemasiya
madurai_HC

 ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் அரச ஊழியர் அமைப்புக்கள் இணைந்த சங்க (ஜாக்டோ-ஜியோ) அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்தை கைவிடக்கோரி மதுரை உச்ச நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து குறித்த அமைப்பினர் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

கடந்த சில காலமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஜக்டோ ஜயோ அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவில் எந்த நிபந்தனையும் வைக்காமல் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினால், வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு  ஏற்பாடு செய்யப்படும் அத்துடன் தலமைச் செயலரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தயார் எனக் கூறப்பட்டது.

மேலும் அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்க எத்தனையோ வழி இருக்கின்றது? உங்கள் பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?பரீட்சை நடக்கும் காலத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவது மாணவர்களை பாதிக்காதா? என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.   போராட்டத்தை மீளப்பெறுவது குறித்து நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்  உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சற்று முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg